Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. குவிந்து கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்…. களத்தில் இறங்கிய மீட்புக்குழுவினர்கள்….!!

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி ஏரியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் mi-8 என்னும் ஹெலிகாப்டர் ஒன்று மொத்தமாக 16 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி ரஷ்யாவிலுள்ள ஹம்சட்கா என்னும் பகுதியில் அமைந்துள்ள குரில் ஏரியில் விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதன் விளைவாக மீட்புக்குழுவினர்கள் விபத்தில் சிக்கிய சுமார் 8 பேரை மீட்டுள்ளார்கள். இதில் 4 பேர் எந்தவித காயமுமின்றி நலமுடன் உள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் ஹெலிகாப்டர் விழுந்த அந்த ஏரியில் அதிகமான சுற்றுலா பயணிகளின் உடல்களும் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனையும் மீட்புக்குழுவினர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த தகவலை ரஷ்ய நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |