Categories
உலக செய்திகள்

அதிரடியாக இயற்றப்பட்ட புதிய சட்டம்…. பொங்கியெழுந்த அரசுக்கு எதிரானவர்கள்…. பின்னணியை தெரிவித்த போலந்த்….!!

போலந்தில் ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியே உள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிரான சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியேவுள்ள ஊடக நிறுவனங்கள் தங்கள் நாட்டின் ஒளிபரப்பாளர்களை கட்டுப்படுத்துகிறது என்று கூறி போலந்து அரசாங்கம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒரு புதுவித ஊடக சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

அதாவது போலந்தில் நிறைவேற்றப்பட்ட இந்த ஊடக சட்ட மசோதா வெளிநாட்டு நிறுவனங்களின் தடையை வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 229 வாக்குகளும், மசோதாவிற்கு எதிராக 227 வாக்குகளும் கிடைத்துள்ளது.

இது குறித்து அரசுக்கு எதிரானவர்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்கள். அதாவது அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் டிவி சேனல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு அங்கமே இந்த சட்ட மசோதா என்று கூறியுள்ளார்கள்.

Categories

Tech |