தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும். 14 மாவட்டங்களில் உள்ள விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்படும். இதுபோக சாகுபடி பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்ட்டேராக உயர்த்தபடும் என்று தெரிவித்துள்ளார்