Categories
மாநில செய்திகள்

Budjet: விவசாயிகளுக்கு அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார்.

இந்நிலையில் அவருடைய உரையில், நடப்பாண்டில் 2500 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்னை, கரும்பு, பருத்தி, பயிர்களை தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இயந்திர வேளாண்மை விளைபொருள் மதிப்பு கூட்டுதல் உள்ளிட்டவை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |