Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோயிலுக்கு புறப்பட்ட குடும்பம்…. வழியில் நேர்ந்த கொடூரம்…. 7 பேர் பலி….!!

குலதெய்வ கோயிலுக்கு சென்றபோது லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் குல தெய்வமான மாரியம்மன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். இவருடன் கலா, முனியம்மாள், பரிமளா உள்ளிட்ட 11 பேர் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.

இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தில் சுந்தர் என்பவரும் அவரின் இரண்டு மகன்களும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் சந்தவாசல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்து நிலைதடுமாறி அருகில் வந்த லாரியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 4 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரை விசாரணை செய்துள்ளனர். இதனை அடுத்து விபத்து நேர்ந்த அந்த காரில் 5 அல்லது 6 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த காரில் 11 பேர் பயணம் செய்ததால் டயரின் அழுத்தத்தின் காரணமாக வெடித்து நிலைதடுமாறி இருக்கலாம் என காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |