யானை பசிக்கு சோள பொறி போல என தமிழக பட்ஜெட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் யானை பசிக்கு சோள பொறி போல பெட்ரோல் விலை குறைப்பு பெட்ரோல் – டீசலுக்கு 5 ரூபாய், 4 ரூபாய் குறைக்கணும், அதுதான் வாக்குறுதி. உண்மையில் ஒரு ஜென்டில்மேனாக இருந்தால் மக்களை ஏமாற்றக்கூடாது. பெட்ரோலுக்கு ஐந்து ரூபாய் குறைப்போம் என்று சொன்னாங்க, டீசலுக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று சொன்னாங்க.
ஆனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்து விட்டு அதிலும் ஒரு செக் வைத்தார்கள். எல்லாருக்கும் கிடையாது. டீசலுக்கு 4 ரூபாய் என்ன ஆச்சு ? டீசல் கிராமப்புறங்களில் டிராக்டர், லாரி வைத்திருப்பவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் போகும், மாநிலத்திற்குள்ளே போகும்… டீசலுக்கு 4 ரூபாய் கொடுத்தால் விலை குறைகின்ற சூழ்நிலை இருக்கும்.
ஆனால் அதைப்பத்தி கப்சிப், வாயை திறக்கவில்லை சுத்தமாக…. போட்டாச்சு பட்டை நாமம்.. ஆனால் பெட்ரோல் மட்டும் பெயருக்காக மூன்று ரூபாய் குறைத்து விட்டு அது யாருக்கு வருதோ…. கிட்ட தக்க பல லட்சம் பேர் வாகன ஓட்டிகள் இருக்கிறார்கள்… ஏதோ ஒரு லட்சம் பேர், 2 லட்சம் பேர், 3லட்சம் பேருக்கு கொடுத்து விட்டு ஆஹா..! நாங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள் இதை தூதி பாடுவதற்க்கென்று சோசியல் மீடியாவில் ஒரு கேங்க் இருக்கு, அதான் நடக்கப் போகுது.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் கொடுப்போம் என்று சொன்னீர்களே… அதை கொடுக்க வேண்டியதானே… எவ்வளவு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் இல்லத்தரசிகள். இந்த பட்ஜெட்டில் வரும்…. சொன்னபடி செய்வாங்க…. ஓட்டுப் போட்டோம் என… 500க்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளி வீசி… அள்ளித் தெளித்து… எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமென்று…. உட்கார்ந்துவிட்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்கு ஒரு ஏமாற்றம் தான் மிஞ்சிய நிலைமை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.