தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததையடுத்து நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து முதன்முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரிட்சார்ந்த முறையில் நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்படும். காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படும். கோவையில் தேங்காய், திருச்சியில் வாழை, ஈரோட்டில் மஞ்சள், விருதுநகரில் சிறுதானிய தொழில்களுக்கும் மையம் அமைக்கப்படும்.