பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் புதிதாக BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
பகல் நிலவு எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதைதொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் புதியதாக BMW சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை சுமார் 40 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் தனது சொகுசு காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வளைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CSgWLIgHCvM/?utm_medium=copy_link