Categories
உலக செய்திகள்

குழந்தையின் விளையாட்டு…. கவனக்குறைவால் தாய்க்கு நேர்ந்த முடிவு…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

குழந்தையின் விளையாட்டால் தாயின் உயிர் பரிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் புளோரிடா என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் Shamaya Lynn என்னும் 21 வயதுடைய இளம்பெண் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி Shamaya Lynnக்கு மொபைல் போனில் முக்கியமான வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அதனால் அவர் குழந்தையை விளையாட வைத்து விட்டு வீடியோ காலில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் வீட்டில் வைத்து இருந்த குண்டுகள் நிறைந்த துப்பாக்கி ஒன்று குழந்தையின் கையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து குழந்தை தனது கையில் சிக்கிய துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது டிரிக்கரை அழுத்தியுள்ளது.

உடனடியாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு வீடியோ கால் பேசிக்கொண்டு இருந்த Shamaya Lynnன் தலையில் பாய்ந்துள்ளது. அதன்பின் அவர் அந்த இடத்திலேயே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அந்த நபர் 911 என்ற அவசர உதவி நம்பருக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி தகவல் கொடுத்துள்ளார். இதுக்குறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் Shamaya Lynnயை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் Shamaya Lynnன் தலையில் குண்டு ஆழமாக இறங்கியுள்ளதால் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்த சோகமான சம்பவம் அப்பகுதி  மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |