நடிகை கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர அவர் மலையாளத்தில் மரைக்காயர் எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் சர்க்கார் வாரி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அப்பா, அம்மா, அக்கா உடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.