மேஷ இராசி அன்பர்களே…!! இன்று வீன் பலிகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். வியாபாரம் விருத்தியாக இருக்கும். கொடுக்கல் , வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். நீண்ட பயணத்தால் செலவு கொஞ்சம் கூடும். முக்கிய பணி நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும். நலம் விரும்புவோரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் , வியாபாரம் செழிக்க சில மாற்றங்களைச் செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல்நலம் சீராக்க உதவும். இன்று மனக்குழப்பமும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றி பெறும். மாணவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும் , கவனமாக படிப்பது எப்போதுமே நல்லது. எதிலும் எச்சரிக்கை இருக்கட்டும். காரியத்தடை கால தாமததுடனே இன்று நிறைவேறும். இன்று குடும்பத்தில் ஒரு அளவு கலகலப்பு இருக்கும் , சந்தோசம் காணப்படும். இன்று நீங்கள் வெளியில் செல்லும் போது நீல நிற கைக்குட்டையை எடுத்து செல்வது சிறப்பு. உங்களுடைய காரியம் சிறப்பாக நடக்கும். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் முருகனை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 5
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்