தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தமிழக மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக அரசின் 100 நாள் சாதனை அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயணம், பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு, பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.