Categories
உலக செய்திகள்

விரோத செயலில் ஈடுபட்ட உளவு விமானம்…. வான் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…. ஏமனில் நிலவும் பதற்றம்….!!

வான்வெளியில் விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படையினர் தகுந்த ஆயுதங்களை கொண்டு சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் நாட்டில் மாரிப் கவர்னரேட்டின் மத்கல் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் அமெரிக்க உளவு விமானம் ஓன்று வான்வெளியில் விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஹவுத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஹவுத்தி போராளிகள் குழுவின் செய்திதொடர்பாளர் Yahya Sare’e தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது “வான்வெளியில் விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படை ஸ்கேன் ஈகிள் என்ற ஆயுதங்களை கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த காட்சியானது  ராணுவ ஊடகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்னர் வெளியாகும்” என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதையும் தற்போது வரை அமெரிக்கா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |