Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

3ஆவதாகவும் பெண் குழந்தை…. தாய் பாலுக்கு பதில் எருக்கம் பால்…. அதிர்ச்சி….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பட்டி என்ற கிராமத்தில் முத்துவேல் மற்றும் தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு குழந்தை ஏழு நாட்களில் இறந்து விட்டதாக குடும்பத்தினர் குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர். ஆனால் அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கிராமத்தில் உள்ள செவிலியர் ஒருவர் புகார் வருவாய் துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வருவாய்த் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தேன்மொழியின் தாயார் உமாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் குழந்தைக்கு எருக்கம் பால் கொடுத்து குழந்தையை கொடூரமாக கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |