சூப்பர் சிங்கர் நடுவர் திடீரென வெளியிட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருப்பவர் தான் பென்னி.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி சூப்பர் சிங்கர் பற்றி எதுவும் பதிவிட மாட்டேன் என்றும் அதில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் அனைத்து மோசமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நானும் சாதாரண மனிதன் தான், எல்லாவற்றிற்கும் நன்றி என்றும் பதிவு செய்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து என்ன ஆச்சு சார் என்று கமண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CSi5ncwIJ4v/?utm_source=ig_embed&ig_rid=662f1251-ed1d-4195-99da-c3d6a970403c