Categories
அரசியல் மாநில செய்திகள்

மூலை முடுக்குகெல்லாம் சொன்னீங்க…! பகல் கனவு காணாதீங்க… நாங்க பயப்படமாட்டோம் ..!!

பொய் வழக்கு போட்டு கழக தொண்டர்கள் வேகத்திற்கு தடை போட திராவிட முன்னேற்ற கழகத்தின் பகல் கனவு காண வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் கண்டித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது,  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது 505 க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றுதாக கூறி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தீர்கள். தேர்தல் சமயத்தில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நான் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்பது தான் என்று தமிழகம் முழுவதும் மூலை முடுக்குகளிலும் மாண்புமிகு முதலமைச்சர் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகியும் இதற்கு எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.

மேலும் நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை மாணவச் செல்வங்கள் நீங்கள் நீட் தேர்வுக்கு நன்கு படித்து தயாராகுங்கள் என்று மாணவர்களுக்கு தெளிவான அறிவுரையும் வழங்காமல்…. மாணவ சமூகத்தினர் இடையே பெரிய குழப்பத்தை இந்த விடியா அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். எனவே நீட் தேர்வு ரத்து தீர்வு காணாத திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் மீது திராவிட முன்னேற்றக் கழக அரசு பொய் வழக்குப் போடுவதை கடுமையாக கண்டிக்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில் இப்படி பொய் வழக்கு போட்டு கழக தொண்டர்கள் வேகத்திற்கு தடை போட திராவிட முன்னேற்ற கழகத்தின் பகல் கனவு காண வேண்டாம். இதேபோன்று பொய்வழக்கு நாங்கள் அஞ்சமாட்டோம், சட்டப்படி அதை நாங்கள் எதிர் கொள்வோம்.  அதனால் உண்மைக்குப் புறம்பாக வழக்குகளைப் போட்டு பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |