கன்னி இராசி அன்பர்களே…!! இன்று நண்பரோடு ஏற்பட்ட பகை மாறும் நாளாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டி ஊக்க படுத்துவார்கள். இன்று தொழில் வியாபார வளர்ச்சியில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன் , மனைவி ஒருவரை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.
பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். இன்று மனம் அமைதியாக காணப்பட்டு வெற்றி நடை போடுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிற கைகுட்டையை எடுத்து செல்வது சிறப்பு. இந்த நிறம் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். அதே போல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்டமான எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்