அஜித்தை போலவே மேக்கப் செய்திருக்கும் மேக்கப் கலைஞரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் திரைப் படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இதேபோல் இப்படத்தின் நாங்க வேற மாதிரி எனும் முதல் பாடலும் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் மேக்கப் கலைஞர் ஒருவர் அஜித்தைப் போலவே மேக்கப் செய்து உள்ளார். அஜித்தை போலவே இருக்கும் அவரின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.