விருச்சக ராசி அன்பர்களே…!! இன்று நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும். பிள்ளைகள் நலன் கருதி சேமிக்கக் கூடிய எண்ணம் உருவாகும். இடம் , பூமி வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம் காண்பீர்கள். புதிய முயற்சி ஓரளவு நன்மை கொடுக்கும். தொழில் வியாபாரம் தாமத கதியிலே இருக்கும். மிதமான அளவில் தான் பண வரவு கிடைக்கும். தியானம் , தெய்வ வழிபாடு மனம் அமைதி பெறுவதற்கு உதவும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் , திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறுவது படி நடந்துகொள்வது நன்மை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். இன்று ஓரளவே மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அணிந்து செல்லுங்கள். இல்லையேல் வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். இதனால் காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும் , நீங்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்