பேருந்தில் இருந்த கண்டக்டரிடம் பணத்தை திருட முயற்சி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமார அள்ளி பகுதியில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்கின்ற அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பேருந்து மொரப்பூரில் நின்ற போது பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர் அப்போது ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக கண்டக்டர் பணப்பையை திறந்த சமயத்தில் திடீரென ஒருவர் அதனை திருடிக்கொண்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
அப்போது பொதுமக்கள் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் அறிவுமணி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.