Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”நட்பு பகையாகும்” குடும்பத்தினரால் சிறு சிறு சண்டை உண்டாகும் …!!

மகர ராசி அன்பர்களே…!! இன்று அமைதி கூடும் , ஆலயம் சென்று வழிபட வேண்டிய நிலைமை இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது கூடுதல் கவனம் ஏற்படும். நட்பு பகையாக கூடும். பேசும்போது கவனம் இருக்கட்டும்.வீண் விரயம் கொஞ்சம் உண்டாகும். உறவினரின் பேச்சை தொந்தரவாக கருதுவீர்கள். இன்று தொழில் , வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழி வகைகளை சிந்திப்பீர்கள். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு , சிறு பிரச்சினைகள் உண்டாக கூடும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் , வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்கட்டும்.

இன்று கணவன் , மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். இன்று ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை சந்திக்கக்கூடும். இன்று நீங்கள் முன்னேற்றமான காரியங்களில் ஈடுபடும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிற கைக்குட்டை எடுத்துச் செல்வது அந்த காரியம் எளிதாக நிறைவேறும். அதுபோலவே காலையில் எழுந்ததும் மனதார மகாலட்சுமியை வழிபட்டு இன்று தொடங்கும் பட்சத்தில்  அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு

அதிஷ்டமான எண் : 2 மற்றும் 6

அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |