இங்கிலாந்து அரசாங்கத்தின் பயணம் குறித்த புதிய அறிவிப்பால் ஜெர்மனி நாட்டின் பிரதமர் அந்நாட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் ஆகஸ்ட் 12ஆம் தேதி பயணம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா குறித்த 2 வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இங்கிலாந்திற்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா குறித்த இரு வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளார். ஆகையினால் தற்போது இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்த இந்த புதிய பயண விதியினால் ஜெர்மனி பிரதமர் அந்நாட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.