கனடாவில் காவல்துறை அதிகாரி ஒருவர், தன் மனைவியும் வேறு நபரும் முத்தமிடுவதை கண்டவுடன் அவர்கள் இருந்த ட்ரக்கை உலோக கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளார்.
கனடாவில், Ottawa காவல்துறையில் Ken Bruce என்பவர் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களாக தன் மனைவி வித்தியாசமாக செயல்படுவதை அறிந்திருக்கிறார். இந்நிலையில், இவர் வீட்டில் இருந்த சமயத்தில் அவரின் மனைவி ஷாப்பிங் சென்றுள்ளார். எனவே, Bruce மனைவி மீது சந்தேகமடைந்து, அவரின் வாகனத்தை டிராக் செய்யக்கூடிய ஆப்பை பயன்படுத்திருக்கிறார்.
அப்போது மனைவியின் வாகனம் வேறு இடத்திற்கு சென்றது தெரிந்தது. எனவே மொபைலில் மனைவியை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. எனவே தன் வாகனத்தில் அவர் இருக்குமிடம் நோக்கி சென்று விட்டார். அங்கு இவரின் மனைவியின் வாகனம் ஒரு ட்ரக் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த ட்ரக்கினுள், அவரின் மனைவியும் இன்னொரு நபரும் கட்டிப்பிடித்தபடி முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். இதை கண்டவுடன் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற Bruce, தான் வைத்திருந்த உலோகக்கம்பியை கொண்டு அந்த ட்ரக்கை அடித்து நொறுக்கியுள்ளார். எனினும் தன் மனைவி மற்றும் அந்த நபரை அவர் எதுவும் செய்யவில்லை.
அதன் பின்பு தன் மேலதிகாரியிடம் நடந்தவற்றை விவரித்துள்ளார். எனினும் அந்த நபர் ட்ரக் உடைந்ததற்கு எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. எனவே Bruce மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனினும் அவர் தானாகவே முன்வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
என்றாலும், ஒரு காவல்துறை அதிகாரியே சட்ட ஒழுங்கை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதை நினைவுப்படுத்துவதற்காக மற்றும் பிற காவல்துறையினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவரை 10 நாட்கள் பணி இடைநீக்கம் செய்ய கோரப்பட்டுள்ளது. வரும் மாதத்தில் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது தெரியவரும்.