ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை அதிர்ச்சி நினைவு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு பிரிவினையால் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவாக ஆகஸ்ட் 14ல் பிரிவினை அதிர்ச்சி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபோது பிரிவினையால் ஏற்பட்ட வலிகளை ஒருபோதும் மறக்க இயலாது.. இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததுடன் வெறுப்பு வன்முறையால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.. மேலும் நமது மக்களின் போராட்டங்கள் தியாகங்களின் நினைவாக ஆகஸ்ட் 14 பிரிவினை அதிர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்..