ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் மிகவும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள கனட தூதரகத்திலிருந்து தங்கள் நாட்டின் ஊழியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு கனட ராணுவ படைகள் சென்றுள்ளதாக வெளியான தகவலை தற்போது கனட நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு காபூலில் இருக்கும் கனட தூதரகத்திலிருந்து தங்கள் நாட்டின் ஊழியர்களை வெளியேற்ற கனடா திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஆப்கானிஸ்தானிற்கு கன்னட நாட்டின் சிறப்பு படை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து தற்போது கன்னட நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் மேல் குறிப்பிட்டுள்ள இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.