மீனம் இராசி அன்பர்களே….!! இன்று இடமாற்ற சிந்தனைகளால் உங்களுக்கு மனம் ஓரளவு அலைபாய கூடும். திடீர் பயணங்களால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். பிரியமான நண்பரின் சந்திப்பு ஒருவரால் பிரச்சனை தீரும். தொழில் போட்டிகளை இன்று சமாளிப்பீர்கள். போட்டி பந்தயத்தில் ஈடுபடவேண்டாம். தொழிலில் உள்ள குளறுபடியை சரி செய்வதால், ஓரளவு வளர்ச்சி கிடைக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் , மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும்.
பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவது நன்மையை கொடுக்கும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டும்.இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது பச்சை நிற ஆடைகள் அணிந்து செல்லுங்கள் அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்து செல்லுங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதில் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மயில் நீல நிறம்