மகாராஷ்டிரா மாநிலம் , யவத்மால் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்பவர் எட்டாம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு, தனது மூத்த சகோதரர் என்பவருடன் காஸ் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். ஸ்டீல் மற்றும் அலுமினியம் தகடுகளை கொண்டு அலமாரி, கூலர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க கற்றுக் கொண்டார். இவரைப் பற்றிய இவரது நண்பர் சச்சின் என்பவர் கூறுகையில்: “3 இடியட்ஸ் திரைப்படத்தில் வரும் ராஞ்ச்சோ என்ற கதாபாத்திரத்தின் அதிக அளவில் ஈர்க்கப்பட்ட இப்ராஹிம் ஹெலிகாப்டர் தயாரிக்கும் முறையை யூடியூபில் பார்த்து தயாரித்துக் கொண்டிருந்தார். பின்னர் மாருதி 800 கார் இன்ஜின் உள்ளிட்ட ஹெலிகாப்டர் தயாரிப்புக்கு தேவையான பொருள்களை திரட்டினார்.
2 ஆண்டு முயற்சிக்குப் பிறகு ஹெலிகாப்டரை தயார் செய்தார். இதற்காக தனது கடைக்கு அருகே கடந்த 10-ம் தேதி தான் தயாரித்த ஹெலிகாப்டரில் பைலட் இருக்கையில் அமர்ந்து பறக்கத் தொடங்கினார். அப்போது ஒரு இறக்கை மற்றவை இறக்கையின் மீது இடித்தது. அதில் உடைந்த ஒரு பாகம் இப்ராஹிமின் தொண்டையில் வெட்டியதில் அவர் நிலைகுலைந்து தரையில் விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.