நாளை நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, நாடு முழுவதுமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கடும் அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, இந்தியா முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Categories