மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். சங்கரய்யாவின் உடல் நிலை கருதி அவருடைய இல்லத்திற்கு சென்று முதல்வர் நேரில் சென்று விருதை வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது பெறும் முதல் ஆளுமை சங்கரய்யா தான்.
மேலும் அவருக்கு 10 லட்சத்துக்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் விருதினையும், காசோலையையும் வாங்கிக்கொண்ட சங்கரய்யா ரூபாய் 10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரிடம் திருப்பி வழங்கினார்.