ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் பாலோயர்கள் கிடைத்ததை அடுத்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா. இதைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமானார்.
https://www.instagram.com/reel/CSetFYWqyPw/?utm_source=ig_embed&ig_rid=055b4ab0-f2fe-4bd9-a346-4e7555d7494e
இந்நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் பாலோயர்கள் கிடைத்ததை அடுத்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய முதல் புகைப்படம், தியேட்டரில் பார்த்த முதல் படம், தனக்கு கிடைத்த முதல் விருது, தனது முதல் பாலிவுட் படம் போன்ற பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகா முதல் முதலில் திரையரங்கில் பார்த்த படம் என்று விஜய்யின் ‘கில்லி’ படத்தை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.