Categories
மாநில செய்திகள்

சுதந்திர தினம்: பொதுமக்களுக்கு தடை…. தமிழக அரசு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினமான இன்று  சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கபட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நிகழ்ச்சிகளை காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று மரியாதை வளர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |