போக்சோ சட்டத்தின் கீழ் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொழுமம் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் அய்யப்பன் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அய்யப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.