சுடுகாட்டில் வைத்திருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணிப்பள்ளம் பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் ரோட்டரி நிர்வாகத்தின் சார்பில் கண்ணாடியால் ஆன உண்டியல் நன்கொடை வசூல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணையில் உண்டியலில் 15,000 ரூபாய் வரை இருந்திருக்கலாம் என காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.