தமிழக ஓட்டுனரை தாக்கிய வடமாநில இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சென்னை டிஜிபி அலுவலகம் எதிரே சிவச்சந்திரனின் கால் டாக்ஸியில் வடமாநிலத்தவர்கள் ஏறியுள்ளனர். குடிபோதையில் இருந்த இருவரும் ஆர்கே சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரில் ஏசி குளிர்ச்சி போதவில்லை என்று கூறி தகராறு செய்ததோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
காரை நிறுத்திய சந்திரனை மேலும் தாக்கிவிட்டு அவர்கள் இருவரும் அருகில் இருந்த பண்ணாரி அம்மன் டவர்ஸ் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சென்று ஒளிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் வடமாநிலத்தவர் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதை அடுத்து வடமாநிலத்தவர்களை போலீஸ் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுதே,
தாக்கிய தமிழக இளைஞர்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாக கூறி பண்ணாரி அம்மன் டவர்ஸ் காவலாளிகள் இருவரையும் ஓட்டுநர் சந்திரனும் பொதுமக்களும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனிடையே வடமாநிலத்தவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர் திரும்பி வந்து பண்ணாரி அம்மன் டவர்ஸ் முன்பு நின்றிருந்த இளைஞர்களை பிவிசி பைப் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. குடிபோதையில் ஓட்டுநரை தாக்கிய வடமாநிலத்தவர்கள்ஐ விட்டு விட்டு தங்களை எப்படி தாக்கலாம் என்று இளைஞர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.