முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் காவல்துறையினர் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சிவகிரி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த 50 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் கொரோனாவில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களிடம் முகக்கவசம் அணியாமல் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.