தமிழகத்தில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவளம் கடற்கரை, வேடந்தாங்கல் சரணாலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம், ஆதிபராசக்தி கோயில்,மாமல்லபுரம், கடற்கரை கோயில்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.