Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டயர் குடோனில் வெளியேறிய புகை…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

டயர் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருப்பந்துறை பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் பகுதியில் பழைய டயர்களை வாங்கி புதிதாக ரீவைண்டிங் செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இதற்காக மைக்கேல் ஏராளமான பழைய டயர்கள் பொருள்கள் போன்றவற்றை அடுக்கி வைப்பதற்காக குடோன் வைத்திருக்கிறார். இந்நிலையில் அந்த குடோனில் திடீரென புகை வந்துள்ளது. அதன்பின் சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் குடோன் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மைக்கேல் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 வாகனங்கள், பழைய டயர்கள் மற்றும் பொருட்கள் உள்பட 5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் காவல்துறையினர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |