Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! எதார்த்தமாக பழகுவீர்கள்….! அலைச்சல் ஏற்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பெண்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் கூடும்.

இன்று மனம் தளராமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். பொருட்களை மட்டும் கொஞ்சம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் குறை கூறும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய மதிப்பையும் மரியாதையையும் உயர்த்திக் கொள்வீர்கள். உங்கள் மீது பிறருக்கு அக்கறை ஏற்படும். அனைவரிடமும் அன்பாக பழகி பழகுவீர்கள். எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். திறமை வெளிப்படும். தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரியத்தடை, தாமதம், வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். புத்தி சாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. கணவன்-மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். இல்லத்தில் மழலை செல்வம் கேட்க கூடிய சூழல் இருக்கின்றது. குடும்பத்தைப் பொறுத்தவரை விட்டுக்கொடுத்து சென்றால் எதையும் சாதிக்க முடியும்.

பெண்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் கூடும். பெண்கள் உற்சாகமாக எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு பிடித்தமான பொருள் சேர்க்கை ஏற்படும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழல் உருவாகும். காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கஷ்டங்கள் இருந்தாலும் இறுதியில் வருத்தங்கள் நீங்கி சந்தோஷம் கூடும். கண்டிப்பாக காதல் கைக்கூடிவிடும். மாணவர்கள் கல்வியில் முன்னேறி செல்ல கூடியவர்களாக இருப்பார்கள். விளையாட்டுத் துறையிலும் முன்னேற கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |