Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! தன்னம்பிக்கை கூடும்….! மகிழ்ச்சி இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும்.

இன்று விடுமுறை நாட்களை ரொம்ப அற்புதமாகவும் அருமையாகவும் பொழுதை கழிப்பதற்கான சூழல் இருக்கும். உல்லாசப் பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மனதில் சந்தோஷம் ஏற்படும். காதல் மனைவிக்கு என்ன வேண்டுமோ அதனை வாங்கிக் கொடுப்பீர்கள். காதல் கைகூடி இன்பத்தை கொடுக்கும். காதலில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். மனதில் நிம்மதியற்ற நிலை இப்போது படிப்படியாக சரியாகும். இல்லத்தில் அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாகும். எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். தன்னம்பிக்கை கூடும். செல்வம் சேரும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். இன்று முக்கிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும். சக ஊழியர்கள் உங்களுடைய கருத்தைக் கேட்டு மாற்று கருத்து சொல்லாமல் அதனை ஏற்றுக் கொள்வார்கள்.

அது உங்களுக்கு பெருமையாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் எல்லாம் கட்டுக்குள் அடங்கி எல்லாம் சிறப்பான முன்னேற்றத்தைக் கொடுக்கும். தேவையான இடங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கடும் பிரச்சினையின் போது கவனமாக பேச வேண்டும். மாணவர்கள் எதையும் உற்சாகமாக செய்ய முடியும். அதற்கான ஆற்றல் இருக்கும். தைரியம் இருக்கும். கல்வியில் முன்னேற கூடிய வாய்ப்புகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்:  நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |