பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேற தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு பஞ்சாப் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி வரும் 16ம் தேதி முதல் வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் போட்ட சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.