Categories
உலக செய்திகள்

நியாயமான விலையில்…. கொரோனா வைரஸ் சோதனை…. தகவல் வெளியிட்ட பிரித்தானியா அமைச்சர்….!!

வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பின்பு தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு போக்குவரத்து துறை PCR பரிசோதனை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக புகார் எழுப்பியுள்ளது. இதனால் பச்சை மற்றும் அம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டணமானது 88 பவுண்டுகளிலிருந்து 66 பவுண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அம்பர் பட்டியலில்உள்ள நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டணமானது 170 பவுண்டுகளிலிருந்து 136 பவுண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு சுகாதாரம் மற்றும் பொது பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த PCR பரிசோதனை கட்டணமானது கோடை விடுமுறைக்கு வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு ஒரு பெருந்தடையாக இருந்தது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் Sajid Javid கூறியதில் ” நியாயமான விலையில் தரமான பரிசோதனைகளை அளிப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கட்டணம் அதிகமாக வசூலிக்கும் பரிசோதனை மையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |