சிறுமி தூக்கிட்டு தற்கொலை இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகனின் வீட்டில் சிறுமி தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியின் சித்தப்பாவாகிய பாலமுருகன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் உடற்கூறு பரிசோதனை முடிவில் இந்த சிறுமி கர்ப்பமாகி இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் பாலமுருகன் தலைமறைவாகிவிட்டார். மேலும் பாலா முருகனைப் பிடித்த காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர். அதன்பின் பாலமுருகன் கொத்தமங்கலத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.