Categories
உலக செய்திகள்

தலைநகர் பறிபோகுமா….? மனித உரிமைகள் மீது கட்டுப்பாடு…. வேதனையில் ஐ.நா. பொதுச்செயலாளர்….!!

பெண்கள் மற்றும் செய்தியாளர்களின் உரிமைகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை கையகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் காபூலை கைப்பற்ற தலீபான்கள் தீவிர முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு மறுபடியும் ஆப்கானிஸ்தானை முழுமையாக தலீபான்கள் அவர்களின்  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அதில் “தலீபான்கள் கைப்பற்றிய மாகாணங்களில் அவர்கள் மனித உரிமைகள் மீது கட்டுப்பாடு விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் செய்தியாளர்களின்  உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது வேதனை அளிக்கிறது என்று” அண்டனியோ கட்டர்ஸ் கூறியுள்ளார்.

Categories

Tech |