Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அனைவரிடமும் அன்பு காட்டுவீர்கள். அன்புக்கு கட்டுப்படுவீர்கள். எதிரிகளின் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சாதகமானபலன் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களது கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். பயணத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு பிரச்சனையிலும் தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுக்கும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். வேலையில் அலைச்சல் உண்டாகும். இன்று இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். செயலில் நிதானம் தேவை.

பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு காரியத்தைச் செய்யுங்கள். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களது கல்வியில் உங்களுக்கு அக்கறை இருக்கும். தேவைக்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள், இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் கருநீல நிறம்.

Categories

Tech |