பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடியும் நாளையும், மறுநாளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் கடற்படை , போர் கப்பல்கள் , விமானப்படை , விமானங்கள் , போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாமல்லபுரத்தில் 22 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவும் , மாமல்லபுரத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.