சென்னை வரும் சீன அதிபருக்கு 34 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது
நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக தமிழகம் வரும் இரு தலைவர்களையும் 34 இடங்களில் வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கிண்டி ஓட்டலின் வாயிலில் வாழை மற்றும் கரும்பு களால் வளைவுகள் அமைக்கப்பட்டு நாதஸ்வர இசையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கரகாட்டமும் , காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம் , ஒயிலாட்டம் நடத்தப்படுகின்றது. அதே போல மத்திய கைலாஷ் அருகே மதுரை கரகாட்டக் குழுவினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சுமார் 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு அளிக்கப்படும் இந்த வரவேற்பு 49 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.