Categories
மாநில செய்திகள்

”கர்நாடகாவுக்கு அனுமதி கொடுக்காதீங்க” முதல்வர் – மத்திய அமைச்சருக்கு கடிதம் …!!

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு நிலைகளில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் தற்போது மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் திட்ட அனுமதிக்கு அனுமதியை மத்திய அரசு வழங்க கூடாது என்று தனது கடிதத்தின் வாயிலாக தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திலும் வலியுறுத்த வேண்டும் என்றும் தன்னுடைய கடிதத்தின் வாயிலாகமத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத்துக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை பார்த்தோமென்றால் காவேரி நீர்படுகை மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரிப்படுகையில் எந்த வித அணையும் கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பில் இருக்கக் கூடியதனை சுட்டிக்காட்டி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

 உச்ச நீதிமன்றம் தன்னுடைய உத்தரவை மீறி  மீண்டும் , மீண்டும் கர்நாடகா மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு அனுமதி பெற்ற திட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து  முயற்சித்து வருகின்றது.  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த நிலையில் கர்நாடகாவுக்கு திட்ட அனுமதியை வழங்க கூடாது என்று முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்கள்.

Categories

Tech |