Categories
மாநில செய்திகள்

சீன அதிபருக்கு வரவேற்பு : ”9, 11 வகுப்பு…. 5,750 மாணவர்கள் பங்கேற்பு ….!!

சீன அதிபரை 5750 9 மற்றும் 11_ஆம் வகுப்பு மாணவர்கள் வரவேற்கின்றனர்.

நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு பள்ளியில் இருந்தும்  எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் சீன அதிபரை வரவேற்க 5, 750 பள்ளி மாணவர்கள்  பங்கேற்கின்றனர். ஒவ்வொரு பள்ளியில் இருந்து 250 லிருந்து 1000 மாணவர்கள் பங்கேற்று வரவேற்பு அளிக்க உள்ளனர். வரவேற்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பள்ளி மாணவர்கள் விமான நிலையத்தின் இடதுபுறத்தில் இருக்கக்கூடிய இடத்தில் இருந்து சுங்கச்சாவடி , மாமல்லபுரத்திற்கு செல்லும் வழி நெடுக மாணவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

வரவேற்பு பணியில் ஈடுபடுவதற்காக  9 மற்றும்11_ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கின்றனர். அதிபர் தங்கும் ஹோட்டல் ,  மாமல்லபுரம் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அதேபோல் அவர்கள் மீண்டும் தங்கும் விடுதிக்குச் செல்லும் வழிநெடுக வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |