இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதன் பிறகு தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்திட வாரீர், ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்போம் என்று பாடலுடன் தனது உரையைத் தொடங்கினார்.
இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.8,500- இல் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள், வீராங்கனைகள் நிறைந்த மண் தமிழ்நாடு. கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. பொதுவாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்த நான் தமிழ்நாடு மக்களால் முதல்வராக ஏற்றுக்கொள்ளப்பட்டது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.