Categories
தேசிய செய்திகள்

“ரூ100 கோடி ஒதுக்கீடு” விவசாய தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் அதிரடி திட்டம்…!!

விவசாயத்துறையில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு தொழில்துறை ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்திய நாட்டின் 94 சதவிகித விவசாயிகள் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தகம் ஏற்றுமதி உள்ளிட்டவை மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு சார்பில்  திட்டமிடப்பட்டுள்ளது.

Image result for விவசாயம்

தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை டெல்லியில் நாளை முதல் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச கண்காட்சியில் மத்திய  விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவின் 170 கூட்டுறவு நிறுவனங்களில் மற்றும் ஆறு கண்டங்களில் உள்ள 35 நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

Categories

Tech |